Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

புதிய வரிக் கொள்கைகள் தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கின்றன - GMOA

T

The Leader Desk

அக்டோபர் 25, 2022 • 4:55 AM

புதிய வரிக் கொள்கைகள் தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கின்றன - GMOA

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அது சுகாதாரம் மற்றும் பிற துறைகளை அதலபாதாளத்தில் தள்ளக்கூடும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின் அழுத்தம் காரணமாகவே இந்த வகையான வரிக் கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என்பது பகுப்பாய்வு செய்த பலரின் கருத்தாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
  • எனவே, இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்துமூலமாக அறிவிக்க அந்தச் சங்கம் தீர்மானித்துள்ளது.
எழுத்து அளவு:

அது சுகாதாரம் மற்றும் பிற துறைகளை அதலபாதாளத்தில் தள்ளக்கூடும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

 

எனவே, இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்துமூலமாக அறிவிக்க அந்தச் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே, வரிக் கொள்கையில் திருத்தங்களை சமர்ப்பிக்கும் பாரிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் உள்ளதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை மற்றும் நிபந்தனைகளின்படி வரிக் கொள்கைகள் செயற்படுத்தப்பட்டன என்பது தெளிவாகவுள்ளதுடன், மறைக்க எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின் அழுத்தம் காரணமாகவே இந்த வகையான வரிக் கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என்பது பகுப்பாய்வு செய்த பலரின் கருத்தாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வரிக் கொள்கைகளின் விளைவாக பல மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியாளர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ள ஏனைய மருத்துவமனைகளில் இந்த நிலைமை மோசமாக உருவாகி வருகிறதென்றும் பெரும்பாலான சிறப்பு மருத்துவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...