Tamil Leader News
முக்கியம்
பாடசாலை மாணவர்களுக்கான உணவுக் கொடுப்பனவுக்கு வரவு-செலவுத் திட்டத்தில் வெட்டு!●பணம் இருந்தும் தேக்கமடையும் அபிவிருத்தி: 2027 இன் பாரிய சவாலை எவ்வாறு எதிர்கொள்வது?●SLT-Mobitel நிறுவனத்தின் புதிய AI பயணத்திற்கு உலகளாவியப் போட்டியின் சவால்!●'மீன் செயலி' கதை: 1 இலட்சம் மீனவர்களும் ஒரு பில்லியன் ரூபாயின் உண்மையும்!●மீமுரே சம்பவம்: பாலியல், ஆசை மற்றும் கலாசாரத்தின் இருண்ட கண்ணாடி!●ஞானசார தேரரின் 4 வருட சிறைத் தண்டனையை உறுதி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!●பாகிஸ்தானை வீழ்த்தி 10ஆவது சாஃப் கிண்ணத்தை வென்றது இந்தியா!●5,000 வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்கப்பட்ட மர்மம் குறித்து விசாரணை கோரிக்கை!●இம்யூனோகுளோபின் வழக்கு வெளிப்படுத்திய மருந்துச் சந்தைப் போட்டியின் இரகசியம்!●சீனொபெக் பின்வாங்கலைத் தொடர்ந்து இலங்கையின் எரிசக்தி வரைபடம் மாறுமா?●
வர்த்தகம்

சீனொபெக் பின்வாங்கலைத் தொடர்ந்து இலங்கையின் எரிசக்தி வரைபடம் மாறுமா?

Menaka

Menaka

நவம்பர் 18, 2026 • 10:29 AM

சீனொபெக் பின்வாங்கலைத் தொடர்ந்து இலங்கையின் எரிசக்தி வரைபடம் மாறுமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவிருந்த 3.7 பில்லியன் டொலர் பெறுமதியான சீனொபெக் (Sinopec) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் எரிசக்தி கொள்கை குறித்து மீள்பார்வை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
  • சபுகஸ்கந்த விரிவாக்கம்: 2003 ஆம் ஆண்டுமுதல் செயற்பட்டுவரும் லங்கா ஐ.
  • ஆண்டுகள் பழமையான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரச-தனியார் பங்குடைமை (PPP) ஊடாக, தினசரி 50, 000 பீப்பாய்களிலிருந்து 100,000 பீப்பாய்களாக விஸ்தரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • அந்நியச் செலாவணி சேமிப்பு: தற்போது நாட்டின் எரிசக்தித் தேவையில் 25% முதல் 30% வரையே சுகுஸ்கந்த மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
எழுத்து அளவு:

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவிருந்த 3.7 பில்லியன் டொலர் பெறுமதியான சீனொபெக் (Sinopec) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் எரிசக்தி கொள்கை குறித்து மீள்பார்வை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கமைய, ஹம்பாந்தோட்டைத் திட்டத்திற்காகப் புதிய சர்வதேச விலைமனுக்களைக் (Tenders) கோர அரசாங்கம் தயாராகி வருகிறது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் நவீனமயமாக்கலும் இந்தியாவின் அனுபவமும்

புதிதாக முதலீட்டாளர் ஒருவர் வருவதுபோல் சுழியிலிருந்து (Zero) ஆரம்பிக்க வேண்டிய தேவையில்லை என்பதால், இலங்கையின் எரிசக்தி சந்தையில் ஏற்கனவே பலத்த வேரூன்றியுள்ள இந்தியாவிற்கு இப்புதிய திட்டங்களில் விசேட அனுகூலம் கிடைக்கும் எனத் துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர்.

  • சபுகஸ்கந்த விரிவாக்கம்: 2003 ஆம் ஆண்டுமுதல் செயற்பட்டுவரும் லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC) நிறுவனம் விரிவான விநியோக வலையமைப்பைக் கொண்டுள்ளது. 60 ஆண்டுகள் பழமையான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரச-தனியார் பங்குடைமை (PPP) ஊடாக, தினசரி 50,000 பீப்பாய்களிலிருந்து 100,000 பீப்பாய்களாக விஸ்தரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

  • அந்நியச் செலாவணி சேமிப்பு: தற்போது நாட்டின் எரிசக்தித் தேவையில் 25% முதல் 30% வரையே சுகுஸ்கந்த மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இப்பாத்துவாரம் இருமடங்காகின், சுத்திகரிக்கப்பட்ட எரிசக்தியை இறக்குமதி செய்யச் செலவிடப்படும் பெருமளவான வெளிநாட்டுச் செலாவணியைச் சேமிக்க முடியும்.

திருகோணமலை பிராந்திய எரிசக்தி மையமாக மாறுதல்

2025 ஏப்ரல் மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம், திருகோணமலையைப் பிராந்திய எரிசக்தி மையமாக மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும்.

  • எண்ணெய் தாங்கிகள்: சீனக்குடாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணெய் தாங்கித் தொகுதியின் கீழ் பகுதியிலுள்ள 14 தாங்கிகள் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினாலும், மேல் பகுதியிலுள்ள 61 தாங்கிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி கூட்டு முயற்சியாகவும் நிர்வகிக்கப்படுகின்றன.

  • எண்ணெய் குழாய் இணைப்பு: தென்னிந்தியாவின் நாகப்பட்டினம் முதல் திருகோணமலை ஊடாக கொழும்புவரை எரிசக்தி குழாய் வழியை (Pipeline) அமைக்கும் யோசனை குறித்தும் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது வெற்றியளித்தால், இலங்கை எரிசக்தியை இறக்குமதி செய்யும் நாட்டிலிருந்து பிராந்தியத்திற்கே எரிசக்தியை விநியோகிக்கும் மையமாக மாறும்.

சீனொபெக் ஒப்பந்தத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

அம்பாந்தோட்டைத் திட்டம் தோல்வியடைந்ததிலிருந்து அரசாங்கம் சில முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என எரிசக்தி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்:

  1. சந்தை ஆதிக்கம்: ஆரம்ப ஒப்பந்தத்தின்படி சீனொபெக் நிறுவனம் தனது உற்பத்தியில் 20 சதவீதத்தை மாத்திரமே உள்நாட்டுச் சந்தையில் விற்கத் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அதனை 40 சதவீதமாக உயர்த்தக் கோரியமை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) சந்தைப் பங்கிற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்தது.

  2. நிபந்தனைகள் மற்றும் வரிச் சலுகைகள்: அதீத வரிச் சலுகைகள், மேலதிக காணிகள் மற்றும் அரச செலவில் நீர்வழங்கல் போன்ற கோரிக்கைகள் தேசிய நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டத்தின் கீழ் உள்ள நாட்டிற்கு எதிர்கால வரி வருமானத்தை இழக்கும் அதிகாரம் இல்லை.

  3. ஒற்றைத் தரப்பில் தங்கியிராமை: ஒரே நாட்டை முழுமையாக நம்பியிராமல், இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து அனைத்துலக முதலீட்டாளர்களுடனும் சமநிலையான உறவைப் பேணி, வெளிப்படையான விலைமனுப் பொறிமுறை ஊடாகப் போட்டித்தன்மை வாய்ந்த வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு தற்போது ஹம்பாந்தோட்டை, சுகுஸ்கந்த மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மையங்களையும் ஒன்றிணைக்கும் தேசிய எரிசக்தித் திட்டமொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எந்தவொரு முதலீட்டின் உண்மையான வெற்றியும், நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி சேமிப்பு, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் பொதுமக்களுக்குக் கிடைக்கும் நீண்டகாலப் பலன்களைப் பொறுத்தே அமையும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...