Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

நிதி மோசடி தொடர்பில் 'Aura Lanka' நிறுவனத்தின் தலைவர் கைது!

T

The Leader Desk

மே 22, 2024 • 4:15 PM

நிதி மோசடி தொடர்பில்  'Aura Lanka' நிறுவனத்தின் தலைவர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • 'Aura Lanka' நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை மேலதிக நீதிவான் பவித்ரா பத்திரராஜா இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
  • இம்முறை LPL போட்டியில் 'தம்புள்ளை' அணியின் உரிமையாளரும் இவராவார். கடந்த வருடம் நடைபெற்ற சிலோன் பிரிமியர் லீக் (LPL) போட்டியில் 'தம்புள்ள Aura' அணியின் உரிமையாளராக இருந்த 'Aura Lanka' நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல இந்த ஆண்டு அணியின் உரிமையிலிருந்து விலகினார்.
  • மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
எழுத்து அளவு:

'Aura Lanka' நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு கோட்டை மேலதிக நீதிவான் பவித்ரா பத்திரராஜா இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட வாதங்களைக்  கருத்திற்கொண்ட நீதிவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இம்முறை LPL போட்டியில் 'தம்புள்ளை' அணியின் உரிமையாளரும்  இவராவார். 

கடந்த வருடம் நடைபெற்ற சிலோன் பிரிமியர் லீக் (LPL) போட்டியில் 'தம்புள்ள Aura' அணியின் உரிமையாளராக இருந்த 'Aura Lanka' நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல இந்த ஆண்டு அணியின் உரிமையிலிருந்து விலகினார்.

மேலும், எல்பிஎல் கிரிக்கெட் போட்டியில் தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர்களாக இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குறூப் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்நிறுவனத்தின் இணை உரிமையாளர் பங்களாதேஷை சேர்ந்த தமிம் ரெஹ்மான் மற்றும் கலாம் ரகிப் ஆவார்.

இவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்லவிருந்த தமீம் றெஹ்மான் விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று (22) கைதுசெய்யப்பட்டதுடன், அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

LPL 2024 வீரர்கள் ஏலத்தில் போட்டிகளை சரிசெய்ய வீரர்களுக்கு பரிந்துரைத்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...