இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை நவம்பர் 10ஆம் திகதி எடுத்த தீர்மானத்திற்கு இன்று

(21) நடைபெற்ற ஐசிசி நிர்வாக சபை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கிரிக்கட் தடை நீடித்தாலும் இலங்கை தேசிய அணி பங்கேற்கும் போட்டிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என உரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பணத்தை கடுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு விடுவிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த U-19 உலகக் கிண்ணத்தை தென்னாபிரிக்காவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Cricbus இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web