சிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா இன்று (24) அதிகாலை காலமானார்.

அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

மாலினி பொன்சேகா (Malini Fonseka0, இலங்கை சிங்கள நடிகையும் நாடகக் கலைஞரும், இயக்குநரும் ஆவார். "இலங்கை சினிமாவின் ராணி" என்று பெரும்பாலும் கருதப்படும் இவர், 1969ஆம் ஆண்டு தேசிய மாநில நாடக விழாவில் 'சிறந்த நடிகை விருதை' வென்றதன் மூலம் முதன்முதலில் பரவலாக அறியப்பட்டார், அதைத் தொடர்ந்து 1980இல் ‘ஹிங்கன கொல்லா’, 1982இல் ‘ஆராதனா’, 1983இல் ‘யச இசுரு’ ஆகிய படங்களுக்காக சரசவிய சிறந்த நடிகை விருதுகளை வென்றார்.

ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திச லியன்சூரியாவின் புஞ்சி பபா திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பன்னிரண்டு முறை மிகவும் பிரபலமான நடிகைக்கான சிலிம் நீல்சன் மக்கள் விருதையும் வென்றதன் மூலம் சாதனை படைத்துள்ளார்.

2010ஆம் ஆண்டில், ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நடிகர்களில் ஒருவராக சி.என்.என் ஊடகத்தால் பெயரிடப்பட்டார். 1978ஆம் ஆண்டு “ஃபைலட் பிரேம்நாத்” தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார்.

ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

இவர் இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவர் அளித்த வலுவான ஆதரவைப் பாராட்டி இந்தப் பதவி வழங்கப்பட்டது.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

  • யார் அவள் (1976, மொழி மாற்றத் திரைப்படம்)
  • பைலட் பிரேம்நாத் (1978)
  • மல்லிகை மோகினி (1979)
  • பனி மலர்கள் (1981)

இறப்பு

மாலினி பொன்சேகா, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2025 மே 24 அன்று அதிகாலை தனது 78ஆவது அகவையில் காலமானார்.

தனிப்பட்ட விவரங்கள்

பிறப்பு: வன்னி ஆராச்சிகே மாலினி சினேகலதா பொன்சேகா -30 ஏப்ரல் 1947 பேலியகொடை, களனி, இலங்கை

இறப்பு: மே 24, 2025 (அகவை 78) கொழும்பு - இலங்கை

துணைவர்: உபாலி சேனநாயக்க (தி. 1965; மணமுறிவு - 1973), லக்கி டயஸ் (தி. 1986; ம.மு. 2011)

பெற்றோர்: கில்பர்ட் பொன்சேகா (தந்தை), சீலாவதி பொன்சேகா (தாய்)

பணி: நடிகை

விருதுகள்: சிறந்த நடிகைக்கான சரசவிய விருது, மிகவும் பிரபலமான நடிகைக்கான சரசவிய விருது

mali.jpg

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web