திருகோணமலை மாவட்டத் திலே 2இலட்சத்து 36ஆயிரத்து 748 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல்
மக்கள் தடுக்கப் பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி யின் திருகோணமலை மாவட்ட எம்.பி. சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (22) திருகோணமலை மாவட் டத்தில் இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
திருகோணமலை மாவட் டத்தில் உள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள டங்கும் சம்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 40 விவசாயி களுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தையும் கிளிவெட்டி கிராமசேவகர் பிரிவில் 37 விவசாயிகளுக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலத்தையும் பாரதி புரம் கிராமசேவகர் பிரிவில் 45 விவசாயிகளுக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தையும் ஆசாத் நகர் கிராமசேவகர் பிரிவில் 70 விவசாயிகளுக்கு சொந்தமான 148 ஏக்கர் நிலத்தையும் தோப்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 60 விவசாயிகளுக்கு சொந்தமான 93 ஏக்கர் நிலத் தையும் என ஆக மொத்தம் 252 விவசாயிகளுக்கு சொந்தமான 693 ஏக்கர் நிலத்தை வனத் துறையானது தனது எல்லைக் கற்களை இட்டு பிடித்துள்ளதென்று அவர் கூறினார்.