வெளிவிவகார அமைச்சில் கொரோன அச்சம் தனிமைப்படுத்தி சுத்தம் செய்ய நடவடிக்கை.வெளிவிவகார அமைச்சில் பணி புரியும் அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றியுள்ளமை தெரிய வந்துள்ளதை அடுத்து அதிகாரியின் சகாக்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பணியாளர்களுடன் இலங்கையில் கடந்த ஒரு வாரத்தில் இணைந்து பணியாற்றிய பணியாளர்களையும் இரண்டு வாரங்களுக்கு முன் ஐரோப்பிய நாடொன்றின் தலைநகரில் அவர்களுடன் பணியாற்றியவேளை அவருடன் இணைந்து பணியாற்றியவர்களையெல்லாம் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சை சுத்தம் செய்வதற்காண நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு தனது பணியாளர்கள் மற்றும் அமைச்சுக்கு வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதட்காக தொடர்ந்தும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி