பொருளாதார குற்றவாளிகளாக உயர் நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட தங்களின் குடியுரிமை தொடர்பான விடயம்

நீதிமன்றுக்குச் சென்றால், அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வுகளை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குடியுரிமையை பறிக்குமாறு கூறப்பட்டாலும் இதுவரை அவ்வாறனதொரு விடயம் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை இறுதி முடிவுகள் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டாலோ அல்லது அவற்றையும் மீறி குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றத்திற்குச் சென்றாலோ, அங்கு நிச்சயம் போராடுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்த ராஜபக்ஷர்களையும் அவர்களின் சகாக்களையும் தூக்கிலிட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

“நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டைச் சீரழித்தவர்கள் ராஜபக்ஷர்கள் என்று உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது.

“இதை நாம் வரவேற்கின்றோம். ஆனால், இந்தத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காத மஹிந்த ராஜபக்ஷ, நல்லாட்சி அரசில் இருந்த தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியினரே நாட்டைச் சீரழித்தவர்கள் என்று வெட்கம் இல்லாமல் கூறியுள்ளார்.

“நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணமானவர்கள் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய ராஜபக்ஷர்களினதும் அவர்களின் சகாக்களினதும் குடியுரிமையைப் பறிக்க வேண்டும்.

“அவர்களிடமிருந்து நட்டஈடு பெற வேண்டும். அவர்கள் திருடிய பணம் தற்போதும் அவர்களிடமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“அத்துடன் அவர்களைச் சும்மாவிட முடியாது. அவர்களைக் கூண்டோடு தூக்கிலிட வேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web