இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் மற்றும் நாத்தான்டிய பிரதேசத்தில் ஒருவரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதன்போது தெரிவித்தார்.

அவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய 2 நோயாளர்களும் கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று (14) முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விசேடமாக பொதுமக்கள் பெருமளவில் கூடும் வைபவங்கள், கூட்டங்கள் போன்ற கூட்டங்களுக்கு பொலிஸ் அனுமதி வழங்கப்படாது என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி