மார்ச் மாதம் நிறைவடைவதற்கு முன் தேர்தலுக்கான வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்குமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

2020 மார்ச் 23ம் திகதிக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை சம்பந்தமாக முழுமையான தேர்தலுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பது சட்டத்தில் உள்ளது.அதை நிதியமைச்சராக இருக்கின்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு அதை அறிக்கையாகவும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் இச் சந்தர்பத்தில் நாட்டின் ஆதாயம் மற்றும் செலவு தொடர்பான முழுமையான வரவு செலவுத்திட்டம் 2003, 3ம் பிரிவில் குறிப்பிட்டுள்ளதன் படி  சர்பிக்க வேண்டும்.

இச் சந்தர்ப்பத்தில் அரச முதலீடுகளை கையாளுபவர் நிதி அமைச்சரின் செயலாளராவார்.

மார்ச் 2 ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின் மார்ச் 23க்கு முன் இவ்வரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மங்கள சமரவீர கூரியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி