ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஹியூமன் றைட்ஸ் போட் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் இலங்கை தேசத்திற்கு அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருந்த வேளையில் ஐ .நா மனித உரிமை பேரவை 30/01,40/01 தீர்மானங்களை கொண்டு வந்து இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி இருந்தது.ஆனால் அது  நடை முறைப்படுத்தப்படவில்லையென  அந்த அமைப்பு சர்வதேசத்திற்கு தெரிவித்துள்ளது.

அதற்கடுத்ததாக ஐரோப்பிய சங்கம் இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை கொடுப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கவுள்ளது.

இலங்கைப்பாதுகாப்பு பிரிவுகளின் மனித உரிமைகள் செயற்பாடுகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகள் சம்பந்தமாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஹியுமன் றைட்ஸ் போட் அமைப்பின் தெற்காசிய பொறுப்பாளர் மிதாக்சி கங்குலி கருத்து தெரிவிக்கும் போது இத்தீர்மானத்தை விரைவாக அமுல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்கள்  15 பேருடன் சந்திப்பு நடாத்திய மிதாக்சி கங்குலி இத்தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி