தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, இரத்தினபுரி, எஹெலியகொட மற்றும் கலவான ஆகிய பகுதிகளுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேசத்திற்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும், கேகாலை மற்றும் கண்டி காலி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நாகொடை, பத்தேகம மற்றும் எல்பிட்டிய பிரதேசங்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, பாலிந்தநுவர, வல்லாவிட்ட மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் நி்ற மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் மேல் பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெரணியகல, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, ருவன்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம, எலபாத்த, கொலொன்ன, பெல்மடுல்ல, கஹவத்த, கிரியெல்ல, கொடகவெல மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேசங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (07) மாலை 4 மணி முதல் நாளை (08) மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்