Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ரணிலை ஆதரிக்கும் மொட்டுக் கட்சியின் 92 எம்பிக்கள் நேற்றிரவு கூடினர்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 6, 2024 • 5:52 AM

ரணிலை ஆதரிக்கும் மொட்டுக் கட்சியின் 92 எம்பிக்கள் நேற்றிரவு கூடினர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நேற்று (05) இரவு இடம்பெற்றது.
  • கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.
  • திஸாநாயக்க, "தேற்றைய கலந்துரையாடல் மாவட்டக் கூட்டங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அமைப்பது, தொகுதிக் கூட்டங்கள் மற்றும் பிரசார விடயங்கள் தொடர்புடையனவாக அமைந்தது. எங்களுடன் 91 எம்.பி.க்கள் இருந்தனர்.
எழுத்து அளவு:

செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை  பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நேற்று (05) இரவு இடம்பெற்றது.

பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக மாவட்ட மட்டத்தில் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க,

"தேற்றைய கலந்துரையாடல் மாவட்டக் கூட்டங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அமைப்பது, தொகுதிக் கூட்டங்கள் மற்றும் பிரசார விடயங்கள் தொடர்புடையனவாக அமைந்தது.  எங்களுடன்  91 எம்.பி.க்கள் இருந்தனர். இன்னும் சிலர் உள்ளனர். அவர்களின்  பெயர்கள்  விரைவில் வெளியிடப்படும்.என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  கருத்துத் தெரிவிக்கையில்

“ஜனாதிபதி எம்மைப் பிரிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்பதை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகிறேன். நாட்டு மக்களின் கருத்தின்படி ஒன்றிணைந்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குமாறு கோரினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...