LTTE யினரை யுத்தத்தினால் தோற்கடித்தோம் ஆனால் அவர்களின் கருத்துக்கள் தமிழ் அரசியல் வாதிகளால் உயிரூட்டப்படுகின்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனெரல் கமல் குணரத்ன தெரவித்துள்ளார்.

10 வருடத்திற்கு முன் இலங்கை இராணுவம் LTTE  யினரை யுத்தத்தால் தோற்கடித்தது. ஆனால் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்தக் கொள்கையை இன்னும் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். யுத்தத்தில் LTTE  யினரை தோற்கடித்த எமக்கு இந்த சிறு கூட்டத்தின் கொள்கையை தோற்கடிப்பது பெரிய விடயம் அல்ல என்று பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் இராணுவ உயரதிகாரிகளுயுடன் நடந்த சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

zambian 03

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக இந்நாட்டில் தமிழ் அரசியல் வாதிகள்  முன்வைக்கும் யோசனை பிரிவினை வாதமாகும். விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண தமிழ் மக்கள் எனின் அவர்களுக்கு தனி நாடு தேவையில்லை இருந்தாலும் சில அரசியல் வாதிகள் நாட்டைப்பிரிப்பதற்கு முயற்சி செய்கின்றனர். இவர்களது ஆசை நிறைவேறாது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன. என்று பாதுகாப்புச் செயலாளர் அவரது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி