மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கிளிநொச்சி

பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் தேனுஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன், 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மனவேதனையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்