Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

கடந்த 9 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டிலிருந்து வௌியேறியுள்ளனர்

T

The Leader Desk

அக்டோபர் 5, 2022 • 3:34 PM

கடந்த 9 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டிலிருந்து வௌியேறியுள்ளனர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில்களை தேடி வௌிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • இதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை இந்த வருடம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
  • இதனிடையே, கடந்த 9 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.
எழுத்து அளவு:

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில்களை தேடி வௌிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் தொழிலுக்காக 2,37,649 பேர் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. 

கடந்த வருடம் முழுவதும் சுமார் 1,22,000 பேர் தொழில் நிமித்தம் வௌிநாடு சென்றிருந்ததாக பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி.சேனாநாயக்க கூறினார்.

இதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை இந்த வருடம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே,  கடந்த 9 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக வைத்தியர்கள் பலர்  நாட்டிலிருந்து வௌியேறி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் இரட்ணசிங்கம் தெரிவித்தார். 

வௌியேறிய 500 வைத்தியர்களில் 60 பேர் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்காமல் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அரசாங்கம்   விடுமுறை வழங்காமல் காலத்தை இழுத்தடிப்பதால் பல வைத்தியர்கள் சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்காமல் நாட்டை விட்டு வௌியேறும் அபாயம்  காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...