Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

தம்புள்ளை விபத்தில் பெண் பலி,9 பேர் காயம்!

T

The Leader Desk

மே 11, 2024 • 5:41 AM

தம்புள்ளை விபத்தில் பெண் பலி,9 பேர் காயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
  • ஹபரணை, ஹிரிவடுன்ன பிரதேசத்தை சேர்ந்த சந்தியா குமாரி என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • சம்பவத்தில் பலத்த காயமடைந்த மூன்று வயது சிறுமி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இரவு திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற கெப் மற்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியே ஒரு பெண்  உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைந்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்தார்.
 
ஹபரணை, ஹிரிவடுன்ன பிரதேசத்தை சேர்ந்த சந்தியா குமாரி என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மூன்று வயது சிறுமி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
 
ஹபரணையில் இருந்து தம்புள்ளை நோக்கி தயிர் ஏற்றிச் சென்ற லொறியும், கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இந்த விபத்தில் கெப் வண்டியில் பயணித்த அனைவரும் காயமடைந்துள்ளதாகவும் சீகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
கெப் சாரதி கவனக் குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சீகிரிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...