வெளிநாட்டுச் செலாவணி வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது விதிக்கப்பட்ட சில வரையறைகளை/இடைநிறுத்தல்களை தளர்த்தி மத்திய

வங்கி புதிய கட்டளைகளை வௌியிட்டுள்ளது.

 செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைக் குறைத்து நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணிக்காப்பதன் மூலம் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக்கு உதவியளித்து பேணும் நோக்குடன் நிதி அமைச்சர் சில வெளிமுகப் பணவனுப்பல்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு/மட்டுப்படுத்துதவற்கு 2020.04.02ஆம் திகதி தொடக்கம் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் (வெளிநாட்டு செலாவணிச் சட்டம்) 22ஆம் பிரிவின் கீழ் கட்டளைகளை வழங்கியுள்ளார். 

உள்நாட்டு, வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் தற்போதைய அத்துடன் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டும், சர்வதேச கொடுக்கல்வாங்கல்களை மேலும் வசதிப்படுத்தும் நோக்குடனும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் நிதி அமைச்சர் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் புதிய கட்டளையொன்றினை வழங்கியுள்ளார். 

இக்கட்டளையானது மூலதனக் கொடுக்கல்வாங்கல்களுக்கான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீதான சில வரையறைகளை தளர்த்தியுள்ளதுடன் புலம்பெயர்ந்தவர்களின் நடைமுறை மாற்றல்கள் மீதான மட்டுப்பாடுகளை அகற்றியுள்ள அதேவேளை முன்னைய கட்டளையின் கீழ் விதிக்கப்பட்டிருந்த வேறு இடைநிறுத்தல்கள்/ வரையறைகள் தொடர்ந்தும் அமுலிலிருக்கும்.

 புதிய கட்டளையானது 2023.06.28 தொடக்கம் ஆறு (06) மாதங்களுக்கு வலுவிலிருக்கும். அவ்வாறு தளர்த்தப்பட்ட இடைநிறுத்தல்களின்/வரையறைகளின் தொகுப்பு மேல அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. 

 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி