ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

துமித் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 33 ஓட்டங்களையும் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பரீட் அஹமட் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, பதிலுக்கு 324 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

சிறப்பான பந்துவீச்சில் ஈடுபட்ட வனிந்து ஹசரங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

துஷ்மந்த சமிர 7 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மஹீஷ் தீக்ஷன மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுக் கொண்டுள்ளன.

மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 07 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி