Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பியுமி ஹன்ஸ்மாலியின் 8 வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணை!

T

The Leader Desk

ஜூன் 19, 2024 • 5:52 AM

பியுமி ஹன்ஸ்மாலியின் 8 வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படும் பியுமி ஹன்ஸ்மாலியின் 8 முன்னணி வங்கிகளில் காணப்படும் 19 கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெற இரகசியப் பொலிஸாருக்கு மாளிகாகந்த நீதிவான் மஞ்சுள திலகரத்ன அனுமதி வழங்கினார்.
  • இரகசியப் பொலிஸின் சட்ட விரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
  • 'எனது நாட்டுக்காக' அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்தவின் முறைப்பாட்டின் அடிப்படையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் தலைமைப் பரிசோதகர் சம்பத் ராஜகருணா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தரங்க லக்மால் ஆகியோர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.
எழுத்து அளவு:

பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படும்  பியுமி ஹன்ஸ்மாலியின் 8 முன்னணி வங்கிகளில் காணப்படும் 19 கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெற இரகசியப் பொலிஸாருக்கு மாளிகாகந்த நீதிவான் மஞ்சுள திலகரத்ன அனுமதி வழங்கினார்.

இரகசியப் பொலிஸின் சட்ட விரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
 
'எனது நாட்டுக்காக' அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்தவின் முறைப்பாட்டின் அடிப்படையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் தலைமைப் பரிசோதகர் சம்பத் ராஜகருணா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தரங்க லக்மால் ஆகியோர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.
 
கொழும்பு ஹில்டன் குடியிருப்பில் வசிக்கும் பியுமி ஹன்ஸ்மாலி 800,000 ரூபா பெறுமதியான ரேஞ்ச் ரோவர் காரை கொள்வனவு செய்தமை, கொழும்பில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் 148 மில்லியன் ரூபா பெறுமதியான வீட்டை கொள்வனவு செய்தமை, 8 பெரிய வங்கிகளில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வங்கிக் கணக்குகள் மூலம் கோடிக்கணக்கான ரூபா பணத்தை குறுகிய காலத்தில் வைப்புச் செய்தமை  தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
 
2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட பணமோசடிச் சட்டத்தின் 6 ஆம் இலக்கத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு, இரகசியப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதிவான், வங்கிக் கணக்குப் பதிவேடுகளை சமர்பிக்க பொலிஸாருக்கு அனுமதியளித்து, அவர்களிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...