2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக

சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானி Dera Ismail Khan பகுதியில் இடமபெற்ற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

பாலி பயாரா என்ற பல பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

அவர் அல்கொய்தா அமைப்பு மற்றும் Tehreek-e-Taliban பயங்கரவாத அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

இதேவேளை, பாலி பயாராவை பிடித்து தருபவருக்கு 10.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் வெகுமதியாக வழங்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு படை இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி