60,460 சட்டவிரோத போதை மாத்திரைகளை (34 கிலோ) இறக்குமதி செய்த சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால்

கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (18) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

அவரது பயணப்பொதிகளை பரிசோதித்த போது, ​​ மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் மாற்று மருந்தாக இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 40 வயதான திகன, ரஜவெல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் நேற்று (18) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 07 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி