அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் கடந்த சில மாதங்களாக இணையதளத்தில் கசிந்தது. 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ

ரகசிய ஆவணங்கள் இணையதளத்தில் கசிந்தது.

இந்த ரகசிய ஆவணங்களில் உக்ரைன் - ரஷ்யா போர் விவரம் உட்பட பல்வேறு ரகசிய ஆவணங்கள் இணையதளத்தில் கசிந்தன.

இந்த சம்பவம் அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விமானப்படை வீரர் கைது

இந்த சம்பவத்தை தொடர்ந்து இராணுவ ரகசியங்களை கசியவிட்டது யார்? என்று பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இராணுவ ரகசியங்களை இணையதளத்தில் கசியவிட்ட விமானப்படை வீரர் ஜேக் டெக்சாரியா என்ற 21 வயதான விமானப்படை வீரரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்