பாணின் விலை குறைப்பு தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.



அதன்படி பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் குறைத்தன.

பாண் விலை குறைப்பு
இதனையடுத்து 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மொத்த விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 56 ரூபாவால் அதிகரித்துள்ளமையால் தமது உற்பத்திகளை மேற்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி