நாட்டின் பல பகுதிகளில், இன்று (11) காலை காற்று மாசுபாடு மிகவும் அதிகமாக இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி

நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தை தவிர ஏனைய பிரதேசங்களில் இன்று காலை உணர்திறன் உடையவர்களின் உடல்நிலையை பாதிக்கக்கூடிய அளவில் வானிலை காணப்பட்டதாக அதன் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்க காற்றின் தரக் குறியீட்டின் படி நுவரெலியா மாவட்டத்தில் 83 என்ற பெறுமதி பதிவாகியிருந்த போதிலும் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இதன் பெறுமதி 100ஐ தாண்டியுள்ளது.

புத்தளம் நகரில் இதே பெறுமதி 149 ஆகவும், காலி, கராப்பிட்டிய மற்றும் பொலன்னறுவை நகரங்களில் 143 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதே எண்ணிக்கை கொழும்பு நகரில் 149 ஆக பதிவாகியுள்ளதுடன், கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு நகரில் இன்றைய தினம் இருண்ட நிலை காணப்பட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி