ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 14ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்வு

 

நேற்று முன்தினம் (12) மாலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஊடகவியலாளரின் உருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

90களில் இருந்து ஊடகத்துறையில் ஈடுபடத் தொடங்கிய சத்தியமூர்த்தி 2009 பெப்ரவரி 12ஆம் திகதி முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலால் உயிரிழந்தார்.

யாழ்ப்பாண மாவட்டம் - மண்டைதீவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பொலன்னறுவை மாவட்டம், மன்னம்பிட்டியில் பிறந்து வளர்ந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து தனது பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்தார்.

அத்துடன், ஊடகத்துறையில் 1990களில் ஈடுபடத் தொடங்கிய இவர், தொடக்க காலத்தில் புலிகளின் குரலில் நிகழ்ச்சி எழுதுதல் மற்றும் ‘வெளிச்சம்’ சஞ்சிகை உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் கவிதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். 1990களின் பிற்பகுதியில் அரசியல் மற்றும் படைத்துறை ஊடகப்பணியில் ஈடுபட்டார்.

ஈழநாதத்தில் படைத்துறை பத்தியை எழுதி வந்த இவர், ஈழநாடு பத்திரிகையில் ஊடகவியலாளராக செயற்பட்டு அரசியல் படைத்துறை ஆய்வுகளையும் எழுதி வந்தார்.

ஓயாத அலைகள்-3 நடவடிக்கையில் மீட்கப்பட்ட நிலப்பகுதிகளின் பதிவுகளை இவர் திறம்பட செய்தார். தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு தொடக்கம் தாயகத்தில் இருந்து ஈழத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள், மற்றும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தார்.

நாட்டுப்பற்றாளர் விருது

படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்திக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி