Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஹிருணிக்காவுக்கு 69 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கலாம்! - பிரதி சொலிசிட்டர் ஜெனரல்!

T

The Leader Desk

ஜூன் 28, 2024 • 12:09 PM

ஹிருணிக்காவுக்கு 69 வருடங்கள் சிறைத் தண்டனை  விதிக்கலாம்! - பிரதி சொலிசிட்டர் ஜெனரல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த இளைஞரைக் கடத்தி அநியாயமாக தடுத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.
  • கடத்தல் வழக்கு தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
  • இதன்படி, குறித்த குற்றச்சாட்டுக்கு (ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும்) 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பிரதிவாதி செய்த குற்றங்களின் தன்மையைப் பொறுத்து, பிரதிவாதிக்கு 69 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கும் திறன் நீதிமன்றத்துக்கு உண்டு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த இளைஞரைக் கடத்தி அநியாயமாக தடுத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான நீண்ட விசாரணைகளின் பின்னர்  ஹிருணிகா பிரேமச்சந்திரவை குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தீர்ப்பளித்துள்ளார்.

கடத்தல் வழக்கு தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த குற்றச்சாட்டுக்கு (ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும்) 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்டனைக்கு முன்னர் மனுதாரர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டார, பிரதிவாதியின் ஆதரவாளர்கள் எட்டு பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை நினைவு கூர்ந்தார்.

பிரதிவாதி செய்த குற்றங்களின் தன்மையைப் பொறுத்து, பிரதிவாதிக்கு 69 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கும் திறன் நீதிமன்றத்துக்கு உண்டு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதிவாதி தனது பாராளுமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி வர்த்தக நிறுவனம் ஒன்றில்  பணிபுரிந்த ஒருவரை கடத்திச் சென்று குடும்ப தகராறுகளைத் தீர்ப்பதற்கு பணித்துள்ளார்.

இது மிகவும் பாரதூரமான விடயம் எனவும் இது குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட வேண்டிய குற்றம் எனவும் தண்டனையை இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக மாற்றுவது பொருத்தமற்றது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

IMG 20240628 173047 800 x 533 pixel

பிரதிவாதி  ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மத்தேகொட, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்து, பிரதிவாதிக்கு மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயதுடைய மூன்று சிறுவர்கள் இருப்பதாகவும், அவர் சிறையில் அடைக்கப்பட்டால் அந்தப் பிள்ளைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன் பிரகாரம், பிரதிவாதிக்கு சிறைத்தண்டனை வழங்காமல், அவருக்கு தண்டனை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.

முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி இந்தத் தீர்ப்பை அறிவித்த நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதி மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மத்தேகொட நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

அதன்படி தண்டனை விதிக்கப்பட்ட திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு டிஃபென்டரில் கடத்திச் சென்று தடுத்து வைத்து  காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...