ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் ஆரோக்கிய நிலை தொடர்பில் வைத்திய சான்றிதழை நாட்டுக்கு காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர்

உதய கம்மன்பில தெரிவித்துள்ள கருத்தினை வரவேற்றுள்ள நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சஜித் பிரேதாசாவினது மாத்திரமின்றி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களினதும் வைத்திய சான்றிதழை மக்களுக்கு காட்ட வேண்டிய தேவையினை வளியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தி கடந்த 15ம் திகதி கடவத்தையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில உரையாற்றும் போது “சுகாதார நிலைப்பாட்டுக்கு அமைய சஜித் பிரேமதாசாவுக்கு பைத்தியம்” எனக் கூறியிருந்தார்.  எனவே சஜித் பிரேமதாசாவின் வைத்தியச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு சவால் விட்டிருந்தார்.

உதய கம்மன்பிலவின் அந்தக் கூற்றுக்கு பதில் வழங்கிய நிதி அமைச்சர், சஜித் பிரேமதாசாவுக்கு பைத்தியம் என்றால் அது மக்களுக்காக இரவு பகல் பாராது சேவையாற்றும் பைத்தியம் மாத்திரமே எனத் தெரிவித்துள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி