கோத்தாபய ஊடகவியலார் சந்திப்பின் போது குழப்பிக் கொண்டார் : சாதகமான நேரங்களில் யுத்தத்தை நானும், சகோதரணும் ;  பாதகமான நேரங்களில்

நாம் அல்ல, இராணுவ தளபதியே என்றார்! (காணொளி)

“கோடாஸ் வோ” என்ற பெயரில் புத்தகம் எழுதி யுத்தத்தை தானும், தனது அண்ணனுமே முன்னெடுத்தோம் என தம்பட்டம் அடித்த கோத்தாபய ராஜபக்ஷ நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட முக்கிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது யுத்தத்தை முன்னெடுத்தது தானோ, அல்லது தனது அண்ணனோ அல்ல என்றும், இராணுவத் தளபதியே அதனைச் செய்ததாகும் கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பின் போது மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் “ஹிந்து” பத்திரிகையின் ஊடகவியலாளர் மீரா ஸ்ரீனிவாசன், “நீங்கள் தலைமையை வழங்கிய யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கைது செய்யப்பட்ட அல்லது இராணுவத்திடம் சரணடைந்த எல்.டி.டி.ஈ உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம் சுமத்துவதாகும்,  உண்மையிலேயே அவர்களுக்கு என்ன நடந்தது?” என்ற கேள்வியைக் கேட்டார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த கோத்தாபய முதலில் இராணுவத்திற்கு தலைமையினை வழங்கியது தான் அல்ல எனக் கூறினார்.

மீண்டும் குறித்த ஊடகவியலாளர் ”நீங்கள் பாதுகாப்புச் செயலாளராகவும், உங்கள் சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ தலைமையை வழங்கிய யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த எல்.டி.டி.ஈ உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மீண்டும் பதில் வழங்கிய கோத்தாபய “யுத்தத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கியது தானோ அல்லது  தனது சகோதரரோ அல்ல. அதற்கு தலைமைத்துவத்தை வழங்கியது அப்போதை இராணுவத் தளபதியே என தெளிவாக பதிலளித்தார்
.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி