கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் சில வேளை வெற்றிபெற்றால் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதி கிடைப்பதற்கு முன்னர் மொட்டு கட்சிக்குத்

தாவிய ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமல் போகும் நிலை தோன்றியுள்ளது.

ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் மொட்டு கட்சிக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள கூட்டணிக்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய 30 வீத வாய்ப்புக்கள் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.  அதாவது அமைச்சுப் பதவிகள் வழங்கும் போது 30 வீதம் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும் அந்த 30 வீத அமைச்சுப் பதவிகளை வழங்கும் போது அதற்குத் தகுதியான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர்களே என்றும், இதற்கு முன்னர் மொட்டுவுடன் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த ஒதுக்கீட்டில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்றும், அவ்வாறானவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் தேவையாயின் மொட்டுவின் பங்கிலிருந்து வழங்குமாறும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர மொட்டுவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளார்.

ஸ்ரீ.ல.சு.கட்சி மொட்டு கட்சியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது இதற்கு பெசில் ராஜபக்ஷ இணக்கத்தைத் தெரிவித்தன் பின்னரேயாகும்.

இதனடிப்படையில் சில வேளை கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றால் எஸ். பி. திசாநாயக்கா, சரத் அமுனுகம போன்றவர்களுக்கு  அமைச்சுப் பதவிகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி