கொவிட்-19 தொற்றுநோய் இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது

என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த வியடத்தினை தெரிவித்தார்.

வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை என சீன சுகாதார பிரிவினர் அறிவித்துள்ள நிலையில், உலகின் பிற பகுதிகளில் இந்த நிலைமை முற்றிலும் வேறுபட்டது என அதனோம் தெரிவித்தார்.

வெற்றிகரமான தடுப்பூசி செலுத்துகை ஊடாக கொவிட் -19 வைரஸின் தீவிரம் குறைக்கப்பட்டதன் மூலம், வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.

கொவிட்-19 வைரஸ் 2020ஆம் ஆண்டில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானை மையமாகக் கொண்டு, 2019ஆம் ஆண்டின் இறுதியில் இந்த வைரஸ் தோற்றியதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறியது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி