இலங்கையின் பொருளாதாரம் ஆழமான மந்தநிலைக்குள் தள்ளப்பட வாய்ப்புள்ளதாக உலகப் புகழ்பெற்ற

Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இறுக்கமான நாணயக் கொள்கை மற்றும் ஆசியாவின் அதிவேக பணவீக்கம் ஆகியவற்றின் விளைவுகளினால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் முடங்கியுள்ளது என்றும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ப்ளூம்பெர்க் இணையதளத்தின் பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட கணக்கெடுப்பின்படி, ஜூலை மற்றும் செப்டெம்பர் 2022க்கு இடையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளது. இது 2021ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடப்படுகிறது.

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இது இரண்டு ஆண்டுகளில் மெதுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியாகும். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் நாட்டின் பொருளாதாரம் 8.4 சதவீதத்தால் சுருங்கியுள்ளதாக அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி