அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததையடுத்து, இதுவரையில்

வீழ்ச்சியடைந்திருந்த அரிசியின் விலையை நேற்று (14) முதல் அதிகரிக்க ஆலை உரிமையாளர்கள் செயற்பட்டுள்ளனர்.

64 கிலோகிராம் நிறையுடைய நெல் மூடை, கடந்த வாரம் ஆறாயிரம் ரூபாயாக (ஒரு கிலோ நெல் ரூ. 95) குறைந்துள்ளது.

அரிசி இறக்குமதியை தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியின் கொள்முதல் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அறுபத்து நான்கு கிலோ அரிசி மூடையை 6,400 ரூபாய் என்ற விலையில் மில் உரிமையாளர்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு பெரும்போகம் மற்றும் ஏலப் பருவத்தில் விவசாயிகள் நெல் இருப்பு வைத்துள்ளதால், நெல்லின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதிலிருந்து விலகினர்.

அரிசி விவசாயியையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் நோக்கில் கடந்த 9ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலம் அரிசி இறக்குமதியை தடை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கேகாலையில் நேற்று (14) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தெரிவித்தார்.

“நம் நாட்டில் உள்ள நெல் விவசாயி, ஒரு வாழ்வாதார நெல் விவசாயி ஆவார். எனவே, அவர்களின் பொருட்களின் விலையைப் பாதுகாப்பது அரசின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்றாகும். வாடிக்கையாளரைப் பாதுகாப்பதும் பொறுப்பு. அத்துடன் இந்நாட்டில் நெல் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயியின் விற்பனை விலையும் சந்தையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

“யாழ், பருவத்தின் விளைச்சலின் அதிகரிப்புக்கு ஏற்ப விலையை ஸ்திரப்படுத்துவதற்காக நிதியமைச்சுடன் கலந்தாலோசித்து கடந்த 9ஆம் திகதி முதல் அரிசி இறக்குமதியை தடை செய்வதற்கான விசேட வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.

முட்டை விலையில் மீண்டும் மாற்றம்

திருத்தப்பட்ட முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை இன்று (15) நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் அறிவிப்பின் பிரகாரம் புதிய திருத்தப்பட்ட விலை அறிவிக்கப்படும் என குறித்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (14) தீர்ப்பளித்தது.

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, முட்டைக்கான புதிய விலையை உடனடியாக நிர்ணயம் செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி