நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி

பைத்தியக்காரத்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப்பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வைக்காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த கூட்டத்தில், தமிழ் பிரிவினைவாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிங்கள தரப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இதேவேளை, பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்பாக அதிகாரப் பரவலாக்கம் குறித்து அனைவரும் இணக்கத்துக்கு வரவேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டதாக கூறினார்.

65 வருடங்களாக இதுதொடர்பாக தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் இதன்மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில்இ மீண்டும் இதற்கான முயற்சிகளை எடுக்கும் இந்த அரசாங்கத்துக்கு உண்மையில் பைத்தியம் பிடித்துவிட்டதாகவே கருத வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி