இலங்கை என்ற ஒரு நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்த

பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களுக்கும் சரி ஆட்சியாளர்களும் சரி உங்கள் மனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமை தினத்தையிட்டு வலிந்துகாணாமல் போன உறுவுகளின் சங்கள் நீதிகோரி சனிக்கிழமை (10)  மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையிலான ஆர்ப்பாட்ட பேரணியல் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல மனித உரிமைகளுக்கு பேர் போன நாடுதான் இலங்கை 1948ஆம் ஆண்டில் இருந்து மனித உரிமை மீறல் பெருமளவு நடந்தது பெரும்பான்மை மக்களால் எங்கள் சமூகத்திற்கு எதிராகதான் நடந்தது பல இடங்களில் பலர் சொல்லுவார்கள் இது தமிழர்களுக்கான பிரச்சினை மட்டும் என இவ்வாறான கருத்துக்கள் வருவதற்கான காரணம் பல மனித உரிமை மீறல்கள் தமிழர்களுக்கு எதிராகத்தான் நடந்தது

அண்மைகாலங்களில் முஸ்லீம் சமூகத்துக்கு எதிராக ஜனாஸா எரிப்பு போன்ற விடையங்கள் பாரிய மனித உரிமை மீறல்கள் நடந்தது ஆனால், இன்று வரைக்கும் இந்த மனித உரிமை மீறல்பற்றி இந்த நாடு ஜனநாயக நாடாக இருக்கவேண்டும் மனித உரிமைகளை மதிக்கப்படவேண்டும் என கருத்துக்கள் வெளியிடப்படுவதே செயற்பாடுகளில் செய்வது தமிழ்தரப்பு என்பது கவலையான விடையம்.

ஏன் என்றால் கோட்டா கோ கம என்று எல்லாம் தெற்கிலே பெரும்பான்மை சமூகங்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களிலே பாதுகாப்பு  படையினர் அந்த போராட்டகார்ர் மீது வன்முறையில் ஈடுபட்டபோது நாடு முழுதும் பொங்கி எழுந்தது அப்போது அவர்களுக்கு அன்றும் சொன்னோம் இன்றும் சொல்லுகின்றேன் வடக்கு கிழக்கில் ஒவ்வொரு நாளும் சர்வ சாதாரணமாக நடக்கும் விடையம் தான் நீங்கள் குறிப்பிட்ட நாள் பார்த்திருந்தவை.

இந்த மனித உரிமை மதிக்கும் நாடாக இலங்கை மாறும் வரைக்கும் இந்த நாட்டிற்கு எந்தொவொரு எதிர்காலமும் இல்லை மனிதனுக்கே மதிப்பில்லை என்றால் அவ்வாறான நாடு எவ்வாறு ஒரு ஜனநாயக வழியிலே பொருளாதார வழியில் அபிவிருத்தியடைய முடியும் என பெரும்பான்மை சமூகம் உணரவேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இந்த தாய்மார் இவர்கள் களைத்து போய் விடுவார்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த போராட்டத்தை கைவிடுவார்கள் என எவராவது நினைத்தால் பிழையானதை நம்பியிருக்கின்றீர்கள் ஏன் என்றால் இந்த தாய்மார்கள் அடுத்த தலைiமுறைக்கு இந்த போராட்டத்தை ஒப்படைத்துள்ளனர்.

சிலர் நினைக்கலாம் தமிழர்களுக்கு அடித்து அடித்து அவர்கள் கழைத்து விட்டார்கள் என நினைக்கின்றனா. ஆனால் நாங்கள் எவ்வளவு அடித்தாலும் எவ்வளவு கொடுமை செய்தாலும் களைத்து போகமாட்டோம் எங்களது அரசியல் உரிமைக்காகவும் மக்களுடைய மனித உரிமை மீறல்களுக்கான நீதி கிடைக்கும் வரைக்கும் எந்தனை தலைமுறை எடுத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்.

இந்த போராட்டம் நடக்கின்றதால் நாட்டினுடைய பொருளாதாரம் பாளாகப் போகின்றது இன்று பிறக்கின்ற குழந்தையின் எதிர்காலம் பொருளாதாரம் தெற்கு வடக்கு என்று அனைவருது பொருளாதாரமும் முற்றாக அழிந்து போய்க் கொண்டிருக்கின்றது. 75 வருடங்களாக தமிழர்களை அடித்துக் கொண்டு வருகின்றீர்கள் தொடர்ந்து போராடுவோம் தெற்கில் உள்ள மக்கள் இதை உணரவேண்டும்.

சிங்கள மக்களுக்கு எதிரா போராடவில்லை நாங்கள் போராடுவது சிங்கள மக்களால் தெரிவி செய்த அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகத்தான் நாங்கள் போராடுவது எஙகளடைய மக்களுக்கு நடந்த அநீதிக்கு நீதிவேண்டும் எனவும் இந்த நாட்டில் சமத்துவமான அரசியல் உரிமை வேண்டும்  போராடுகின்றோமே தவிர சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி