உலகக்கிண்ண அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்கா அணி என்ற சாதனையை

மொராக்கோ அணி படைத்துள்ளது. போர்த்துக்கள் அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றிபெற்றது.

ஃபீஃபா உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதியின் மூன்றாவது போட்டியில் போர்த்துக்கல் அணியை எதிர்த்து மொராக்கோ அணி விளையாடியது. இந்த போட்டியில் மொராக்கோ வெற்றிபெற்றால், உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்கா அணி என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பு இருந்தது.

மறுபக்கம் போர்த்துக்கல் அணி தோலிவியடைந்தால், ஐந்தாவது முறையாக உலகக்கிண்ண கனவை நோக்கி பயணிக்கும் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் கனவும் முடிவுக்கு வரும். இதனால் போர்த்துக்கல் - மொராக்கோ இடையிலான ஆட்டம் இரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பெஞ்சில் ரொனால்டோ

இதனிடையே, கடந்த போட்டியைப் போலவே நட்சத்திர வீரர் ரொனால்டோ தொடகக் லெவனில் களமிறக்கப்படவில்லை. இந்த நிலையில், ஆட்டம் தொடங்கிய முதல் சில நிமிடங்களில் இரு அணி வீரர்களும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். பின்னர், மொராக்கோ அணியின் தடுப்பாட்டம் வலிமையடைந்த போது, மொராக்கோ வீரர்கள் அட்டாக்கிலும் பாய தொடங்கினர்.

மொராக்கோ முன்னிலை

மறுபக்கம் போர்த்துக்கல் அணி தரப்பில் ஒருங்கிணைந்த அட்டாக்கை செய்ய முடியாமல் திணறியது. இதனிடையே 42ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணியின் என்-நெசரி ஹெட்டர் மூலம் முதல் கோல் அடித்து, அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். இதன்பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

போர்த்துக்கல் அட்டாக்

இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியின் முதல் சில நிமிடங்களிலேயே நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறக்கப்பட்டார். இருந்தும் போர்ச்சுகல் அணியின் அட்டாக்கை மொராக்கோ அணி வீரர்கள் சிறப்பாக தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்தில் போர்த்துக்கல் அணி வீரர்கள் பாக்ஸிற்குள் பந்தை கொண்டு சென்றாலே, எளிதாக அதனை தடுத்து மொராக்கோ அணி அட்டாக் செய்ய தொடங்கியது.

கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ

போர்த்துக்கல் அணியின் தோல்வி காரணமாக நட்சத்திர வீரர் ரொனால்டோவின் உலகக்கிண்ணப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து களத்தில் இருந்து கண்ணீருடன் ரொனால்டோ வெளியேறினார்.

37 வயதாகும் ரொனால்டோ அடுத்த உலகக்கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், ஜாம்பவான் வீரர் ரொனால்டோவின் உலகக்கிண்ண கனவு கானல் நீராக முடிவுக்கு வந்துள்ளதாக இரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

‘உலகமே எங்களுக்கு துணை

ஃபிஃபா உலகக்கிண்ணத்தை மொராக்கோ அணி கைப்பற்றுவதற்கு உலகமே ஆதரவாக இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெக்ராகுய் தெரிவித்துள்ளார்.

மொராக்கோ அணியின் வெற்றி குறித்து வாலிட் ரெக்ராகுய் கூறுகையில்,

“கனவுடன் வந்த மொராக்கோ அணி, தற்போது உலகம் முழுவதும் ரசிகர்களை வென்றுள்ளது. பெல்ஜியம், ஸ்பெயின், போர்த்துக்கல் அணி நட்சத்திரங்கள் நிறைந்த அணியை வீழ்த்தி காட்டியுள்ளோம். இந்த உலகக்கோப்பைத் தொடரில் அனைவருக்கும் பிடித்த அணியாக மாறி இருக்கிறோம்.

“உலகக்கிண்ணித்தின் ராக்கி அதிக திறமை வாய்ந்த வீரர்களும் பணமும் இல்லாமல் வெற்றியை பெற முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்துள்ளோம். எங்கள் மக்களுக்கும், ஆப்பிரிக்கா கண்டத்திற்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளோம்.

“இப்போது மொராக்கோ அணிக்கு ஆதரவாக உலகமே இருக்கிறது. இதுவரை எந்தவொரு போட்டியின் முடிவுக்கும் நான் கண் கலங்கியதே கிடையாது. ஆனால் போர்ச்சுகல் அணியுடனான போட்டியின் இறுதி விசில் ஊதப்பட்ட பின், என் கண்கள் கலங்கின. எப்போதும் மனதளவில் நாம் திடமாகவும், உறுதியாகவும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக வீரர்கள் முன் எனது உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டேன்.

“நம்பிக்கை இல்லை ஆனால் உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறுவது சாதாரண விஷயமல்ல. இங்கு வரும்போது அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் தான் உணர்வுகள் அதிகமாகி, கண்கள் கலங்குகின்றன என்று தெரிவித்துள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்