ஏற்றுமதிக்கு வரி விதிப்பதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தைக் கூட இழக்கும் அபாயம்

பாரியளவில் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இப்பிராந்தியத்தில் போட்டி நிலவும் நாடுகளில் ஏற்றுமதி வரி குறைவாக இருப்பதே இதற்கான காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

30 சதவீத வரி மூலம் விரும்பிய இலக்குகளை அடைய முடியும் என்ற நிலையில்இ தொழில் வல்லுநர்களுக்கு 36 சதவீத வரி விதிப்பது நியாயமற்றது என்றும் அவர் கூறினார்.

நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு அரசாங்கத்திடம் மானியம் கோரியுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பு மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வரி விதிக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்க செலவினங்களை சந்திப்பது இன்னும் நெருக்கடியாகவே உள்ளது என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைத்தன. உள்ளூர் வருமான வரி சட்டத் திருத்த மசோதாவும் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி