நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுடைய உரிமை சார்ந்த

விடயங்களில் பெருந்தோட்ட நிர்வாகங்கள் தான்தோன்றி தனமாகவும் உரிமைகளையும் இழப்புக்கான நட்டஈடுகளையும் வழங்காது தொழிலாளர்களை வீதிக்கு இறங்க வைத்தது. இந்த நிலையில், நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டங்கள் பாரிய வெற்றியை தந்துள்ளது என, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இதொகாவின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலளர் சந்தப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜீவன் எம்.பி கூறியதாவது,

“கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் ஹொரண பெருந்தோட்ட யாக்கத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை மாபெரும் வெற்றியை வழங்கியதுடன், மக்களிடத்தில் பெரும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

“இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இ.தொ.காவின் ஊழியர்களுக்கும் மாற்று தொழிற்சங்கங்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

“மேலும், கட்சி பேதமின்றி இதற்கு ஒத்துழைப்பு வழங்கியமையால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்ததுடன், தேயிலை நிறையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கும் தீர்வு காணபட்டது. மழைக் காலத்துக்கு வேறாகவும் வெயில் காலத்துக்கு வேறாகவும் நிறை மாற்றப்பட்டுள்ளது.

“அத்துடன் 15 வருட காலமாக பெருந்தோட்டத்தில் சேவை புரிந்த திரு. சிவக்குமார் அவர்கள் மின்சாரம் தாக்கி கண்டி வைத்தியசாலையில் அனுமதிமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்து விட்டார். இச்சந்தர்ப்பத்தில் பெருந்தோட்ட அதிகாரிகள் இவரது குடும்பத்தினருடன் தனிப்பட்ட ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி, குறைந்தளவு பணத்தை வழங்க ஏற்பாடு செய்தனர்.

“நாங்கள் தற்பொழுது எழுத்து மூலமாக  பெற்றுக் கொண்டதுடன் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினருக்கு 50 இலட்சம் ரூபாயையும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட காணியும, அவர் மனைவிக்கு வேலைவாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

“அத்துடன், செந்தில் தொண்டமான் தலைமையில் பதுளை - அக்கரபரத்தன பெருந்தோட்டத்திலும் வெற்றியை கொண்டுள்ளதுடன், மஸ்கெலியா பகுதியிலும் தவிசாளர்.ராமேஸ்வரன் அவர்களது பகுதியான நுவரெலியாவிலும் வெற்றியை கண்டமையானது, அனைத்து பெருந்தோட்ட யாக்கங்களுக்கும் ஒரு பாடத்தை புகர்த்தி இருக்கும் என்பதுடன், எதிர்காலங்களில் இவ்வாறான தவறுகளை செய்யாது இருப்பார்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் இ.தொ.காவின் நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், சட்டத்தரணி மாரிமுத்து ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி