இலங்கைக்கு உதவும் பிரச்சினையில் இனக் கண்ணோட்டம் பார்க்கவில்லை என்று புதுடெல்லி

மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

வெளியுறவு கொள்கை தொடர்பாகஇ மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்இ தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. அந்நாட்டுக்கு பொருளாதார உதவிகள் அளித்தோம். ஒட்டுமொத்த இலங்கைக்கும் உதவினோம். அதில் தமிழ் இனமும் அடங்கும். இலங்கைக்கு உதவும் பிரச்சினையில் இனக் கண்ணோட்டத்தைப் பின்பற்றவில்லை.

'நமது அண்டை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும்போதுஇ நாம் உதவாமல் இருந்தால்இ நமது பொறுப்பை தட்டிக்கழித்த மாதிரி ஆகிவிடும்.

'ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது உண்மைதான். இது நமது நீண்டகால நிலைப்பாடு. முந்தைய அரசுகளும் இதையே பின்பற்றின.

'இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க இதுதான் ஆக்கப்பூர்வமான வழிமுறை என்பதுதான் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு. அதையே தொடர்ந்து பின்பற்றுவோம்' என்று அவர் மேலும் கூறினார்.

Join our WhatsApp group

Screenshot 2022 12 08 at 10.03.57 AM

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி