நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்

வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.

அதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு தொழிலாளர் ஆணையாளர் நாயகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த திட்டத்தைத் தயாரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கையாளும் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், உள்நாட்டில் வீட்டு வேலையாட்களைக் கண்டறிய எவ்வித வேலைத்திட்டமும் இல்லை. இதன்படி, வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்பான கண்டறிவதற்கான முறைமை ஒன்றைத் தயாரிக்குமாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

“எல்லோரும் வெளிநாட்டில் வீட்டு வேலை செய்பவர்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்கள் துன்புறுத்தப்படுவது பற்றி தான் பேசுகிறார்கள். வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்பவர்களை விட உள்நாட்டில் வீட்டு வேலை செய்பவர்களே அதிகம். இதன் காரணமாக உள்நாட்டில் வேலை செய்யும் வீட்டு வேலையாட்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் தொடர்பில் விசேட முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது” என மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் குறிப்பிட்டார்.

Join our WhatsApp group

Screenshot 2022 12 08 at 10.03.57 AM


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி