மக்களை அச்சத்திற்குள்ளாக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசியல்வாதிகள் முயற்சித்து

வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மக்கள் பலியாகக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் அடுத்த வருடத்தில் நாளாந்தம் 06 தொடக்கம் 08 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய நிலைமை காணப்படுகின்ற போதிலும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று, இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன, மின்சார உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள அதிகப்படியான செலவை நுகர்வோர் பொதுமக்கள் மீது சுமத்துவது நியாயமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி