வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட் விதிமுறைகள்

முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, எந்தவொரு விமான நிலையம் அல்லது கடல் துறைமுகம் வழியாக இலங்கைக்கு வரும் எந்தவொரு நபரும் விமானத்தில் ஏறுவதற்கு முன் அல்லது வருகையில் எதிர்மறையான கொவிட்-19 சோதனையை (PCR/RAT) காண்பிக்க வேண்டிய அவசியம் இனி தேவையில்லை.

இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். இன்று (07) முதல் அமலாகும் வகையில் இந்த விதிமுறைகள் தளர்த்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பிரஜைகள்- சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்த பிறகு கொவிட்-19 நேர்மறையாக இருந்தால், அவர்கள் ஒரு தனியார் மருத்துவமனை அல்லது ஹோட்டல், குடியிருப்பு இடத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான செலவை வெளிநாட்டினர்- சுற்றுலாப் பயணிகள் ஏற்க வேண்டும்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி