நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து வரவு செலவுத் திட்ட நெருக்கடியைத் தணிக்க முயற்சிகள்

மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால்இ தற்போதுள்ள டொலர் நெருக்கடியை ஏதேனுமொரு சொத்தை விற்று தீர்க்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

இல்லை என்றால் சர்வதேச நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலை செய்யும் திறனை இலங்கை இழந்துவிடும் எனவும் அரசாங்கத்தின் அன்றாட செலவுகளை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு கையிருப்பை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கொண்டு செல்வதற்கு இலங்கை கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் பந்துல குணவர்தன வலியுறுத்தினார்.

இறுதியாகஇ இவ்வாறான சொத்துக்களை விற்பனை செய்வதில் நாம் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் முடிந்தவரை வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி