இந்திய வம்சாவளி தமிழர்களான மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200வது ஆண்டை முன்னிட்டு

விசேட விழாவொன்றை நடத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பணிகளை முன்னெடுத்துவருதுடன், இந்த விழாவில் பிரதம அதிநிதியாக பாரத பிரதமர் நரேந்திர மோதியை வரழைப்பதற்கான அழைப்பிதழை வழங்கவும் இ.தொ.கா நடவடிக்கையெடுத்துள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

1822ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிப்புரிவதற்காக ஆங்கிலேயர்கள் தமிழகத்திலிருந்து மக்களை வரவழைத்துடன் அவர்களை தோட்டங்களுக்கு அண்டி குடியமர்த்தினர்.

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து 200வது ஆண்டை  முன்னிட்டு அதனை கொண்டாட இ.தொ.கா நடவடிக்கையெடுத்துள்ளது. 

இந்நிகழ்வில் கலை, கலாசாரம், பண்பாடு, இலக்கியம் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளின் ஊடாக மலையக மக்களின் திறமைகளை உலகறிய செய்வது இதன் நோக்காகும்.

இந்த விழாவில் மலையகத் தமிழர்களின் எதிர்கால பயணம் மற்றும் அவர்களுக்கான திட்டங்கள் தொடர்பில் கருத்தாடல்களும் இடம்பெறவுள்ளன.

விழாவுக்கு பிரதம அதிதியாக பாரத பிரதமரை அழைக்க இ.தொ.கா. நடவடிக்கையெடுத்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் பல்வேறு தலைவர்களை அழைக்கவும் இ.தொ.கா முடிவுசெய்துள்ளது. விழாவை சிறப்பாக செய்வதற்கான ஏற்பாடுகளை இ.தொ.கா செய்துவருவதாகவும் அறிவித்துள்ளது. 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி