இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையான

முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கும் என்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்தது.

இதற்கு மாறாக, இவ்வாறான தீர்வுகள் வெறுமனே பூசி மெழுகுவதாக இருந்தால், அதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது என்று, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார்.

அர்த்தபூர்வமான அதிகாரப் பரவலுடன்கூடிய சமஷ்டி முறையிலான அடிப்படையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

சமஷ்டி முறை அதிகாரப் பரவலாக்க நாடுகளே இன்று உலகில் பலம்வாய்ந்த நாடுகளாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் 1926இல் பண்டாரநாயக்கவே முதலில் சமஷ்டி முறை குறித்து வலியுறுத்தினார் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்கள் மீதான வரி அகற்றப்பட்டால், உலகெங்கும் வாழும் தமிழ் மகள்ள உல்லாசப் பயணிகளாக வெளிநாட்டு நாணயத்துடன் நாட்டுக்குள் வருவார்கள் என்றும், சுமந்திரன் எம்.பி இதன்போது குறிப்பிட்டார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி