அரச நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவுகளை இரத்து செய்து சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட நிதி கட்டமைப்பிற்குள், அரச நிறுவனங்களின் துறைசார் நிகழ்வுகள் மற்றும் வௌி நிகழ்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்த கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

அதற்கமைய, அமைச்சுகள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள், அரச தொழில்முயற்சியான்மை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச வங்கிகள், கடமைகளை பொறுப்பேற்றல் மற்றும் ஓய்வூ பெறுவதுடன் தொடர்புடைய நிகழ்வுகள், சினேகபூர்வ சந்திப்புகள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட அ​னைத்து நிகழ்வுகளுக்கும் அரச நிறுவனங்களூடாக ஈட்டப்படும் நிதியை செலவிடுகின்றமை நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி