உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இந்த வாரத்திற்குள் கிடைக்கப்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்ற எல்லை நிர்ணய குழு நியமனத்துடன், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பான திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் சட்டமா அதிபர் தனது கருத்தை தெரிவிக்காததால், உரிய அறிவுறுத்தல்கள் கிடைத்தவுடன் திகதிகள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி