பங்களாதேஷின் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கி, ஆசிய கிளியர் சங்கத்தின் ஊடாக இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை தவிர்க்குமாறு

அந்தநாட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

2022 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் ஆசிய கிளியரிங் யூனியன் பொறிமுறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது.

இதனையடுத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்களும் வர்த்தகம் மற்றும் எந்தவொரு வியாபாரத்தையும் அந்த பொறிமுறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டாம் என்று பங்களாதேஷ் வங்கியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிய கிளியரிங் யூனியன் மூலம் பங்கேற்கும் நாடுகள் உள்-பிராந்திய பரிவர்த்தனைகளுக்கான இறக்குமதி கட்டணங்களை தீர்த்துக்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி