முச்சக்கரவண்டிகளுக்கு முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 20 ரூபாயால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

QR முறையின் கீழ் தொழில்முறை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் இந்த விலை குறைப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை முச்சக்கரவண்டி சங்கங்களுடன் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இந்த விடயம் தொடர்பாக தெரிவித்திருந்தார்.

அதன்படி,  இதுவரை முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றர் பெற்றோல் மாத்திரமே வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை இரட்டிப்பாக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது முதல் கட்டமாக மேல் மாகாணத்தில் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறதென்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் இதன்போது, பேருந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி