இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான தௌிவத்தை ஜோசப் எனப்படும் சந்தனசாமி ஜோசப் தனது 88  ஆவது வயதில் இன்று (21) காலை வத்தளையில் காலமானார்

எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்த  அன்னார்,  சிறுகதையாளராகவும் நாவலாசிரியராகவும் இலக்கிய ஆய்வாளராகவும் மிளிர்ந்துள்ளார்.

அன்னார் 'நாமிருக்கும் நாடே' சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமரர் சந்தனசாமி ஜோசப்  'குடை நிழல்' என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டிற்கான யாழ். இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது.

இலங்கையின் மலையக படைப்பாளிகளில் முக்கியமான நபராகத் திகழ்ந்த  அமரர் சந்தனசாமி ஜோசப், பதுளை – ஹாலி எலயில் 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பிறந்தார்.

இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக்கொண்டார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி